‘மாகாளி’ -முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி.அரவிந்த், தற்போது ‘மாகாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்வாசிகா, அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மனிதர்களின் வாழ்க்கையில் இருக்கும் வலி, எல்லைகள் மற்றும் சமூகத்தின் மீதான ஆழமான அக்கறையை மையமாக வைத்து அழுத்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கிறார்.

‘மாகாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading