‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ‘கறிவிடி லட்சுமி’ படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராக் மயூர், அங்கித் கொய்யா, வி.கே. நரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வட ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறக் கலைஞர் கறிவிடி லட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ‘புர்ரகதா’ கலை மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிய அவரது வாழ்க்கைப் பயணம், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கறிவிடி லட்சுமி கதாபாத்திரத்தில் ஆனந்தி நடித்துள்ளார்.
கவுரி நாயுடு ஜம்மு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார். டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர். அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. கறிவிடி லட்சுமியின் கலைப் பயணத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் டிரெய்லர் காட்டுகிறது.
—
