நடிகையாக திரையுலகில் கால் பதிக்கும் நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா!

நடிகை குஷ்பூவின் இளைய மகளான ஆனந்திதா, பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’, ‘பொன்னியின் செல்வன் 2’ மற்றும் ‘தக் லைப்’ உள்ளிட்ட படங்களில் ஆனந்திதா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தற்போது சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நகைக்கடை விளம்பரத்தில் மாடலாக நடித்த அவந்திகா குறித்து குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமான குறிப்பை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அவந்திகா ‘ஆரம்பம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். சுஜேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று திரிசூரில் நடைபெற்றது. இப்படத்தில் அவந்திகா மற்றும் சரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அல்தாப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட அவந்திகா, லண்டன் சென்று முறையாக நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். விரைவில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார். மேலும், இப்படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading