‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன் – சிவகார்த்திகேயன்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், எந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “பொதுவாக மற்ற நடிகர்கள் நடித்த படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், எந்தப் படத்தை ரீமேக் செய்தால் எனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், தலைவர் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும், ‘அண்ணாமலை’ படத்தில் இடம்பெற்றுள்ள “அசோக், இந்த நாளை உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்” என்ற வசனம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதை கேட்ட ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading