‘ஓம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சாய் பல்லவி!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஓம்’. அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பதால் ‘ஓம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வீடியோ மூலம் சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply