“என் கணவரை ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன்” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா!

விஜய் தேவரகொண்டாவின் கருத்து ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்துவதாகக் கூறி பலர் விமர்சித்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

தனது பதிவில், “எங்கள் காதல் குறித்து தேவையற்ற விமர்சனங்களும் அறிவுரைகளும் தொடர்ந்து வருகின்றன. நான் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள்; விஜய் நன்றாகச் சிந்தித்துச் செயல்படுபவர். எங்கள் வாழ்க்கைக்கு இந்த இரண்டு குணங்களுமே அவசியம். திருமணம் என்பது பிரம்மாண்டமான காதல் முன்மொழிவு மட்டுமல்ல; ஒன்றாக இணைந்து வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் முக்கியம்.

என் கணவர் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது. அவர் என் வாழ்நாள் துணை, என் குழந்தைகளின் தந்தை. என்னை ஆழமாக நேசிக்கும் அவரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அவரை ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன்.எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இறுதிவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்போம். மற்றவர்களின் காதலையும் மகிழ்ச்சியையும் மதிப்பதே அடிப்படை மனிதநேயம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading