ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு விதமாக இருந்தால் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன – இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி!

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்திருந்தாலும், படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, தேர்தல் முடிந்த பின்னர் கோடை விடுமுறை காலத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவித்தார். இதன் மூலம் வெளியீட்டு காலம் குறித்து முதல் முறையாக அவர் நேரடியாக தகவல் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, “ஒரு காலத்தில் ‘வலிமை’ திரைப்படத்தின் வெளியீட்டு தகவல் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது அதேபோல் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டு தகவல் குறித்து பலரும் கேட்டு வருகின்றனர். திரைப்படம் வெளியாகும் முன் விளம்பர நிகழ்ச்சிகளில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி, பின்னர் படம் வெளியானபோது ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தால் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. அதனால் நான் எப்போதும் உண்மையாக பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ‘கருப்பு’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களுக்கெல்லாம் நிச்சயமாக பிடிக்கும், படம் கோடையில் வெளியாகும் என நம்புகிறேன். இந்த திரைப்படம் குறித்து இவ்வாறு மனம் திறந்து பேசுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading