‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜாக சூர்யா… கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நஸ்லென், நஸ்ரியா நசீம், லால், ஆனந்த்ராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஜகரம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இப்படத்திலிருந்து வெளியான ‘ஆத்தி யார்ரா இவ’, ‘ஏரோபிளேன்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘சீன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் நடைபெற்றது. இதில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, இப்படத்தில் சூர்யா ஏற்று நடித்துள்ள டிஎஸ்பி இன்பராஜ் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading