நடிகர் பிரபாஸ் தற்போது ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘பவ்ஜி’ உள்ளிட்ட புதிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் ‘சீதாராமம்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பவ்ஜி’ திரைப்படத்தில், முன்னணி கதாநாயகிகளை தேர்வு செய்யாமல், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இமான்வி இஸ்மாயில் என்பவரை பிரபாஸுக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்ததாக பவன் கல்யாண் நடிக்க உள்ள திரைப்படத்திலும் இமான்வி இஸ்மாயில் கதாநாயகியாக இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகவுள்ள அந்தப் படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட உள்ள நடிகைகள் பட்டியலில் இமான்வியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளியாகாத நிலையில், அறிமுக நடிகையாக இருக்கும் இமான்வி இஸ்மாயில், இரு முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு பெறுவது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகவும், அவருக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
