திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா!

சூர்யா – ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது ‘சீன்’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொண்ட அவர், பாரம்பரிய வெள்ளை உடையில் கோவிலுக்கு வந்திருந்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Add a Comment

Leave a Reply