நடிகை ஸ்ரேயா தற்போது அம்மா மற்றும் மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதுடன், சில படங்களில் சிறப்பு பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார்.
நடிகை ஸ்ரேயா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நடனமே தனது முதல் காதல் என அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இதுவரை நடிக்க வாய்ப்பு கிடைக்காத மற்றும் இன்னும் கனவாக உள்ள கதாபாத்திரம் எது எனக் கேட்கப்பட்டபோது, “ஒரு நடனக் கலைஞரின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்று கூறினார்.
மேலும், ஒரு நடனக் கலைஞரின் வாழ்க்கைப் பயணம், அவர்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
