அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘தர்மன்’. இதில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, சிம்ரன், ராஷி கன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வில்லனாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அண்மையில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தில் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணா, தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது அவர் ‘தர்மன்’ படத்தில் சிறியதாக இருந்தாலும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேடத்தில் முதலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நமோ நாராயணாவின் நடிப்பைப் பாராட்டிய ரஜினிகாந்த் அவரைப் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
