‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 2020-ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நவம்பர் 6-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், படக்குழு விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் மொத்த ஓட்ட நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply