களரி, ஜூலை காற்றில், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற மலையாள நடிகை சம்யுக்தா மேனன், தற்போது பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் சேதுபதியுடன் 33 டெம்பிள் ரோடு படத்திலும், லாரன்ஸ் உடன் பென்ஸ் மற்றும் தி பிளாக் கோல்ட் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதில் தெலுங்கில் உருவாகும் தி பிளாக் கோல்ட் திரைப்படத்தில் கதையின் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளதுடன், முழுமையான ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் அவர் தோன்றுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், எந்தவித டூப் உதவியும் இல்லாமல், மிகுந்த ஆபத்தான ஆக்ஷன் காட்சிகளில் கூட தானே நடித்து வருகிறாராம். இந்த திரைப்படத்தை இயக்குநர் யோகேஷ் கேஎம்சி இயக்கி வருகிறார்.
