என்னை குறித்து மோசமான கருத்துகளை பரப்பும் சிலரால் எதையும் உருவாக்க முடியாது – நடிகை பிரியா வாரியர்!

மலையாள திரைப்படமான ‘ஒரு அடார் லவ்’ மூலம் அறிமுகமாகி, இந்திய ரசிகர்களிடையே தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை பிரியா வாரியர். மலையாளம் மட்டுமின்றி, இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், சில படங்களில் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே அவர் தோன்றுவதாகக் கூறி, இணையத்தில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த விமர்சனங்களில், “பிரியா வாரியர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல கூட்டத்தில் ஒருவராகவே இருக்கிறார் என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் குறித்து பிரியா வாரியர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

அதாவது, உண்மைக்கு புறம்பான செய்திகள், தவறான கமெண்ட்டுகள் என்ற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு மோசமான கருத்துகளை பரப்பும் சிலரால் எதையும் உருவாக்க முடியாது. வெறும் லைக்குகளுக்காக இப்படி செய்வதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading