தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் #D55 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் அடுத்து உருவாகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். 

மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று சென்னை தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மேலும் இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர்கள் லலித், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading