என்னை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை, பிறர் எப்படி புரிந்துகொள்வார்கள் – நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகை மட்டுமல்லாமல், பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது அழகையும் கிரேஸையும் இழக்காமல் முன்னணி நடிகையாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.

தற்போதைய இளம் நடிகைகளுடன் போட்டியிட்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க நடிகை தமன்னா சுமார் ரூ.6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமன்னா, தன்னை புரிந்துகொள்ள தன்னாலேயே முடியவில்லை என்று கூறியுள்ளார். அவர் பேசுகையில், “ஒருசில நேரங்களில் திடீரென கவர்ச்சிக்கு மாறுகிறீர்கள் என்றும், மறுபுறம் கவர்ச்சிக்கு மறுக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள். உங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்று என்னை குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் என்னை புரிந்துகொள்ள என்னாலேயே முடியாத நிலையில் இருக்கும்போது, மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading