நடிகை ஸ்ருதி ராஜ் – தீபக் தினகரன் நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘தென்றல்’. 2009 முதல் 2015 வரை ஒளிபரப்பான இத்தொடரில் ஸ்ருதி ராஜ், துளசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ருதி ராஜ் – தீபக் தினகரன் கூட்டணியில் ‘தென்றல் 2’ தொடர் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தீபக் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
