கதை ரெடி, இயக்குனர் ரெடி… அடுத்தப் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் – நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வந்த அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். “அடுத்த படத்திற்கு நான் ஒப்பந்தமாகி உள்ளேன். அந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று அவர் கூறினார்.

கோவிலில் சிவகார்த்திகேயனை நேரில் பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading