‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கயாடு லோஹர், குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து அவர் அதர்வாவுக்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்திலும், ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டல்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் புதிய படங்களில் கையெழுத்திட்டு பிஸியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயாடு லோஹரிடம், “உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் விஷயம் எது?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், “நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர். அதுவே என் பிரச்சினையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் எளிதில் மனம் உடைந்து விடுகிறேன். எனவே, அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டு, இன்னும் உறுதியானவளாகவும், எந்த சூழ்நிலையிலும் தடுமாறாமல் தன்னம்பிக்கையுடன் நிற்கும் ஒருவராகவும் மாற வேண்டும் என்பதே என் ஆசை” என்று தெரிவித்துள்ளார்.
