வெங்கடேஷ் – அனில் ரவிபுடி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த நடிகர் பகத் பாசில்!

தெலுங்கு திரையுலகில் சரிலேரு நீகேவ்வரு, F2, F3, பகவந்த் கேசரி, சங்கராந்திக்கி வஸ்துனாம், மன சங்கர வர பிரசாத் காரு உள்ளிட்ட பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அனில் ரவிபுடி. சங்கராந்திக்கி வஸ்துனாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனில் ரவிபுடி – வெங்கடேஷ் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம் இடம்பெறுகிறது. அந்த வேடத்தில் நடிக்க நடிகர்கள் கார்த்தி மற்றும் பஹத் பாசில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின.

தற்போது அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அனில் ரவிபுடியின் வழக்கமான பாணியில், அதிரடியான காட்சிகளும் காமெடிகளும் நிறைந்த முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading