ஆக்ஷன் காட்சிகளை படமாக்க ஜோர்டான் பறக்கும் ‘NTRNEEL’ படக்குழு!

கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் சலார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார், படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக டிராகன் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட மூன்று அதிரடியான சண்டைக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் முழுவதும் ஜோர்டனில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அந்த காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading