அல்லு அர்ஜூன்- அட்லியின் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை ராஷ்மிகா மந்தனா?

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர் காக்டெயில் 2, மைசா போன்ற திரைப்படங்களில் கதையின் நாயகியாக நடிப்பதுடன், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ரணபலி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் இதுவரை செய்யாத வகையில், ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது மும்பையில் ராஷ்மிகா தொடர்பான காட்சிகளை இயக்குநர் அட்லி படமாக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கும் காட்சிகளும் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக அல்லு அர்ஜுன் படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா நடிப்பது, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading