டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டார். மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோரும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், விமர்சனம் வைப்பவர்கள் படத்தை பார்த்தால் புரிந்து கொள்வார்கள். மக்கள் ‘பராசக்தி’ படத்தை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர். அந்த படத்தில் எந்த சர்ச்சைக்குரிய காட்சியும் இல்லை. நான் எந்த விதமான பிரசாரமும் செய்யவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஏற்கனவே எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
