‘ஜனநாயகன்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்படுமா? நியூ அப்டேட்!

முதல்வர் விஜய்யின் சினிமா பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியலில் முழு நேர கவனம் செலுத்தி வரும் முதல்வர் விஜய்யின் இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். கடந்த 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது வரை பல்வேறு காரணங்களால் பேசப்பட்டு வருகிறது.

ரிலீசுக்கு முன்பும், வெளியான பிறகும் பல சவால்களை சந்தித்த ‘ஜனநாயகன்’, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படம் இதுவரை ரூ.250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் இறுதி வடிவத்தில் இடம்பெறாத சில காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இருந்த 6 முக்கியமான காட்சிகள் எடிட்டிங் நேரத்தில் நீக்கப்பட்டதாகவும், அவற்றை பின்னர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் எச். வினோத் சமீபத்திய பேட்டியில், ஜனநாயகன் படத்தின் நடித்த 2 கலகலப்பான காட்சிகள், 2 சண்டைக் காட்சிகள் மற்றும் 2 உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இறுதி பதிப்பில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்காக அந்த காட்சிகளை வெளியிடும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply