கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘Youth’… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சிறுவயதிலேயே நடிப்பில் கவனம் பெற்ற அவர், அதன் பின்னர் ‘அசுரன்’, ‘விடுதலை-2’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி, திரைப்பட உருவாக்கத்தின் தொழில்நுட்ப பக்கத்தையும் கற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கென் கருணாஸ் இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு ‘காதலன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும், இந்த திரைப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் 60 நாட்களில் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, தற்போது அடுத்த கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள இந்த புதிய படத்திற்கு ‘யூத்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading