திரௌபதி 2 படத்திற்காக ஐந்து கிலோ உடல் எடை கூட்டினேன் – நடிகை ரக்ஷனா இந்துசூடன் !

நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘திரௌபதி 2’. இந்த படத்தை இயக்குனர் மோகன்ஜி இயக்கியுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரௌபதி 2’ திரைப்படம் வருகிற 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற அறிமுக விழாவில் நாயகி ரக்ஷனா இந்துசூடன் பேசுகையில், “நெருப்பில் இருந்து பிறந்தவள் திரௌபதி. அந்த சக்திவாய்ந்த பெயரை ‘திரௌபதி 2’ படத்தில் எனக்கு வழங்கிய இயக்குனர் மோகன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் திரௌபதி தேவியாக நடித்துள்ளேன். இந்தக் கதை 14ம் நூற்றாண்டு காலகட்டத்தை அடிப்படையாக கொண்டது. அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்வது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

திரௌபதி கதாபாத்திரத்திற்குள் முழுமையாக நுழைவதும், பின்னர் அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியே வருவதும் மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது. பொதுவாக இயக்குனர்கள் தங்கள் பட நாயகிகளிடம் எடை குறைக்கச் சொல்வார்கள். ஆனால் இந்த படத்திற்காக குறைந்தது ஐந்து கிலோ எடை கூட வேண்டும் என்று இயக்குனர் கூறினார். நானும் அதற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டேன்.

வரலாற்றில் திரௌபதி கேரக்டர் எப்படி இருந்ததோ, அதேபோல் திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் முழு முயற்சியும் எடுத்துள்ளேன். இயக்குனரின் தெளிவான திட்டமிடல் காரணமாகவே குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிக்க முடிந்தது. பல தடைகளை கடந்து, தமிழ் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படமாக ‘திரௌபதி 2’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading