விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட டார்க் திரில்லராக படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள BTS (Behind The Scenes) வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாக வடிவமைக்கும் மிஷ்கினின் அணுகுமுறையும், தனது கதாபாத்திரத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் விஜய் சேதுபதியின் உழைப்பும் இடம்பெற்றுள்ளன.படத்தின் பின்னணியில் நடந்த கடின உழைப்பை வெளிக்கொணரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘டிரெயின்’ சாதாரண திரில்லர் அல்ல; வேற லெவல் அனுபவமாக இருக்கும் போலிருக்கிறது என்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
