யுவன் இசையில் உருவாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு!

இசைஞானி இளையராஜாவின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பே ரசிகர்களிடையே ஆரம்பத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என். சுப்ரமணியம் மேற்கொள்கிறார். எலிபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், இசையை மையமாகக் கொண்ட குடும்ப பின்னணியில் உருவாகி வருகிறது.

ஜெயனுடன் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசைப் பயணத்தையும், அவரது பாடல்களின் தாக்கத்தையும் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading