ஜூனியர் என்டிஆருக்கு காயம்… ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ருக்மணி வசந்த் ஜோடியாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜூனியர் என்டிஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

நடிகரின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் ஜே. மதுசூதன் ராவ் மற்றும் டாக்டர் ஆர்.ஏ. பூர்ணசந்திர தேஜஸ்வி தலைமையிலான மருத்துவக் குழு அவரை பரிசோதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.ரசிகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், நடிகரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவரது குழு விளக்கம் அளித்துள்ளது. சில வாரங்களுக்கு படப்பிடிப்பிலிருந்து விலகி, சிகிச்சை மற்றும் ஓய்வில் கவனம் செலுத்த ஜூனியர் என்டிஆர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading