தான் பேசிய வசனத்தையே காரின் பதிவு எண்ணாக பெற்ற நடிகர் மோகன்லால்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காருக்கு தனக்கு விருப்பமான பேன்சி நம்பரைப் பெறுவதற்காக எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் மோகன்லால் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அதே எண்ணுக்காக மேலும் இரண்டு பேர் போட்டியில் இருந்தனர். இதனால் அந்த மூவருக்கும் சேர்த்து அந்த பதிவு எண்ணுக்கான ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் மோகன்லால் தரப்பில் இருந்து வந்த நபர் 1.80 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த எண்ணை ஏலம் எடுத்தார். அதோடு, மற்ற இருவரிடமும் இதற்குமேல் ஏலம் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால், அவர்கள் அந்த எண்ணை மோகன்லாலுக்கே விட்டுக் கொடுத்தனர்.

அந்த பேன்சி நம்பர் என்னவென்றால், மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த ‘ராஜாவின்டே மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபல வசனம் தான் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் மோகன்லால், “என்னுடைய போன் நம்பர் 2255” என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அதனால் தான் தற்போது வாங்கியுள்ள புதிய காருக்கு KL 07 DJ 2255 என்ற பதிவு எண்ணை பெற வேண்டும் என்ற விருப்பத்தில், அந்த எண்ணை ஏலத்தில் மோகன்லால் பெற்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading