பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் தபு!

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஹிந்தியில் ‘பூத் பங்களா’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் தற்போது நடிகை தபு கதாநாயகியாக இணைந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் மீண்டும் தபு நடிக்கிறார் என்பதுதான்.

கடந்த 1997ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ‘விரசாத்’ திரைப்படத்தில் தபு நடித்திருந்தார். இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவானது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வெளியான ‘சினேகிதியே’ படத்திலும் பிரியதர்ஷன் இயக்கத்தில் தபு நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிப்பதற்காக தபு இணைந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading