50 கோடி வசூலை கடந்த சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம்!

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்திற்கு ஒருபுறம் நல்ல வரவேற்பும், மறுபுறம் கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. இருப்பினும், வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே 51 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகாத காரணத்தால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘பராசக்தி’ படத்தை குறிவைத்து எதிர்மறை விமர்சனங்களை பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது படத்தின் வசூல் மற்றும் வெற்றிக்கு தடையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் வெற்றி விழா நாளை காலை சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி வெற்றி விழாவாக அல்லாமல், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading