கடந்த ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷிற்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் இன்னொரு நாயகியாக நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து, நவீன் பொலி செட்டியுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள ‘அனகனகா ஒக ராஜு’ திரைப்படம், இந்த ஆண்டு சங்கராந்தியை ஒட்டி வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இது மீனாட்சி சவுத்ரிக்கு தொடர்ந்து சங்கராந்தி வெளியீடாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மீனாட்சி சவுத்ரி கூறுகையில், சங்கராந்தி பண்டிகை தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ‘சங்கராந்திகி வஸ்துனம்’ வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், அதேபோல் இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் ‘அனகனகா ஒக ராஜு’ படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், இந்த படத்தில் முழுமையான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அந்த வேடம் தனக்கு பெரிய சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்காக பல முறை ரிகர்சல் செய்து, அதிக நேரம் செலவிட்டதாக கூறிய அவர், தனது நகைச்சுவை நடிப்புக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
