கதாநாயகியை மையமாகக் கொண்ட புதிய படத்தில் நடிக்கும் சாய் பல்லவி?

இயக்குநர் கிஷோர் திருமலா தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்ட புதிய கதையை உருவாக்கியுள்ள அவர், அதில் நடிக்க நடிகை சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக அவர் இயக்கிய ‘பர்தா மஹாசாயுலகு விக்யாப்தி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, பக்தி மற்றும் இதிகாச அம்சங்கள் இணைந்த வலுவான கதைக்களத்துடன் தனது அடுத்த படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கதையை முதலில் சாய் பல்லவியிடம் விளக்கியதாகவும், கதாபாத்திரம் பிடித்திருந்ததால் அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுவான பெண் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வரும் சாய் பல்லவி, இந்தத் திட்டத்திற்கும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.சமீபகாலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள் பிரண்ட்’, சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ போன்ற படங்களின் வெற்றி, இந்த வகை கதைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading