ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல்!

‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘ரவுத்திரம்’, ‘கொரில்லா’, ‘கலகலப்பு 2’ போன்ற பல படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘அகத்தியா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ‘பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ராவண கோட்டம்’ திரைப்படத்தை தயாரித்த கண்ணன் ரவி, இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

சமீப காலமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading