நடிகர் துல்கர் சல்மானின் ‘ ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொம்மா பொம்மா’ ஜூலை 27-ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் திரையரங்கு வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் துல்கர் சல்மான், இந்நிலையில் ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் பாடல் அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது .
