முதல் நாளிலேயே 84 கோடி வசூலை அள்ளிய சிரஞ்சீவி – நயன்தாரா நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ திரைப்படம்!

அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 84 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சிரஞ்சீவி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரஞ்சீவி நடிப்பில் கடந்த ஆண்டு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு முன், 2023ஆம் ஆண்டு ‘வால்டர் வீரய்யா’ மற்றும் ‘போலோ சங்கர்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. இதில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான ‘வால்டர் வீரய்யா’ படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதே நேரத்தில், ‘போலோ சங்கர்’ திரைப்படம் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக, தமிழில் சூப்பர் ஹிட்டான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவான ‘போலோ சங்கர்’ எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

அந்த தோல்விக்குப் பிறகு, தற்போது வெளியான ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ திரைப்படம், சிரஞ்சீவியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அனில் ரவிப்புடி இயக்கத்தில் கடந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ படம், சுமார் 50 கோடி ரூபாய் செலவில் தயாராகி, 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தப் படத்தின் வசூல் சாதனையையும் ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ கடக்கும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading