கவனத்தை ஈர்க்கும் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் ‘வெட்டிங் சாங்’ !

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வெட்டிங் சாங்’ தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. நடிகர் கென் எழுதியுள்ள இந்தப் பாடலை சூர்யாவே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடலில் சூர்யாவின் நடனமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவின் நூலி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். இதற்கு முன் வெளியான முதல் பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இதில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் தன்னைவிட சற்று குறைந்த வயது இளைய பெண்ணை காதலிக்கும் சூர்யாவின் கதைக்களம் ரசிகர்களிடையே தனி ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading