இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. 1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி ஜனவரி 10ஆம் தேதியே வெளியிட முடிவு செய்தனர்.

The film production company has officially announced the date of the audio launch of ‘Parasakthi’!க இருக்கும் நிலையில், அடுத்த நாளே ‘பராசக்தி’ வெளியாகுவதால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழா முடிந்ததும் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது, ஜனவரி 3ஆம் தேதி சாய்ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
