பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. ‘மூன் வாக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்கும் இந்த படம், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது. 2026 கோடை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

ஆச்சரியமான தகவலாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ.ஆர். ரஹ்மானே பாடியுள்ளார். இதனுடன், ‘மூன் வாக்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிகராகவும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
35 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இயங்கி வரும் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக திரையில் தோன்றவுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
