என்னுடைய பழைய புகைப்படங்களை பகிர வேண்டாம் – நடிகை மும்தாஜ் வேண்டுகோள்!

நடிகை மும்தாஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், எனது பழைய படங்களை பகிராதீர்கள்’ என்று மும்தாஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :16 வயதில் சினிமாவுக்கு வந்தேன் பல படங்களில் நடித்தேன். சினிமாவில் நடிப்பது என்பது ஒரு தொழில் ஒரு கேரக்டராக மாறி அந்த கேரக்டரில் நடிப்பதோடு நமது பணி முடிந்து விட்டது என்று கருதினேன்.இஸ்லாமிய பெண்ணான நான் திரைப்படங்களில் நடிப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு நடிப்பதை நிறுத்த முடிவு செய்தேன். என்றாலும் நடிப்பு தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாததால், சில உடைகளை அணிய மாட்டேன், சில கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதனை மற்றவர்கள் ஏற்பதாக இல்லை. அதனால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.இப்போது சாதாரண ஒரு இஸ்லாமிய பெண்ணாக குர்ஆன் ஓதுவது, ஹிஜாப் அணிவது, எளிய உணவுகளை உட்கொள்வது என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading