தனது ஃபேவரைட் ஆஸ்திரேலியா நடிகையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகை நதியா!

கடந்த சில வாரங்களாகவே ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நதியா. நேற்று புத்தாண்டை முன்னிட்டு அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்ற போது அங்கே எதிர்பாராத விதமாக வருகை தந்த தனது பேவரைட் ஆஸ்திரேலியா நடிகையான நிக்கோல் கிட்மேனை சந்தித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனடியாக அவரைத் தேடிச்சென்று தன்னை அவரது தீவிர ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் பேசி மகிழ்ந்துள்ள நதியா. ஆர்வமாக அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நதியா, ‛‛என்னுடைய உயரத்திற்கு ஏற்றவாறு அவர் வளைந்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply