மாடர்ன் சேலையில் த்ரிஷா வெளியிட்ட புதிய புகைப்படங்கள் வைரல்!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா பங்கேற்றுள்ளார். இதற்காக மாடர்ன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட சேலையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்தப் புதிய போட்டோஷூட் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து பலரும் லைக்குகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply