கிங்டம் 2 தற்போதைக்கு உருவாகாது – தயாரிப்பாளர் நாக வம்சி!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்களிடையே எடுபடவில்லை. 2025-ம் ஆண்டின் தோல்வி படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும், ‘கிங்டம்’ படத்தின் கதை இன்னும் முடியவில்லை. இதனால் இதன் 2-ம் பாகம் குறித்து கேள்வி எழுந்து வந்தது.தற்போது தயாரிப்பாளர் நாக வம்சி அளித்த பேட்டியில், ‘கிங்டம் 2’ ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். முதல் பாகம் பெரியளவில் வரவேற்பைப் பெறாமல் போனதால் இந்த முடிவினை அவர் எடுத்திருப்பது தெரிகிறது. மேலும், ‘கிங்டம்’ படம் தொடர்பாக இயக்குநரிடம் எவ்வளவோ பேசியும், அவர் கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply