காமெடி கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்தானம், தற்போது கதாநாயகனாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் அவர், பல படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது லவ் பைட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சுதாமன் கிருஷ்ணா இயக்கும் ‘அதிசயப்பிறவி’ என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சந்தானத்திடம் திரையுலகில் யாருக்கு ‘அதிசயப்பிறவி’ என்ற பெயர் பொருந்தும் எனக் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் நடிகர் சிலம்பரசனின் பெயரைக் குறிப்பிட்டார். “உடல் தோற்றத்தை அடிக்கடி மாற்றி வெவ்வேறு விதமாக நடித்து வருகிறார். ‘மாநாடு’ படத்தில்கூட இறப்பது, மீண்டும் உயிர் பெற்று வருவது என நடித்திருப்பார். அதனால் அதிசயப்பிறவி என்றால் அது எஸ்.டி.ஆர் தான்” என்று சந்தானம் சுவாரசியமாகப் பதிலளித்துள்ளார்.
