தி ராஜா சாப் படத்தில் ‘பைரவி’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாளவிகா மோகனன்!

மாருதி இயக்கத்தில் ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். தெலுங்கு படமாக உருவாகியிருந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் கதாபாத்திர விவரங்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. இந்த நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்தில் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக, அவரது முதல் பார்வை போஸ்டருடன் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply