தனது முதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரபல நடிகை, இரண்டாவது படத்தில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, எஸ்2எஸ் சினிமாஸ் தயாரிக்கும் இந்த இரண்டாவது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அவர் தான் ‘பிரபுத்வா ஜூனியர் கலாசாலா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஷக்னா ஸ்ரீ வேணு, இந்த புதிய படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
வெளியிடப்பட்ட போஸ்டரில், கருப்பு நிற உடை அணிந்த இளம் ஜோடி ஒருவர் கையில் ரோஜா பூவை ஏந்தியபடி காணப்படுவதுடன், மற்றொரு இளைஞன் அந்த பெண்ணின் கையை பிடித்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம், மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
