தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை பிரகதி, சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பங்கேற்று பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். அந்த நிகழ்வில், சமூகத்தில் நடைபெறும் அநீதிகள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்து அவர் ஆழ்ந்த கவலையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் செய்பவர்கள் சமூகத்திற்கு தேவையற்றவர்கள் என்றும், அவர்கள் “பூமிக்கு சுமை” எனவும் நடிகை பிரகதி குறிப்பிட்டார். அத்தகைய குற்றவாளிகளுக்கு சாதாரண சட்டப்பூர்வ தண்டனைகளை விட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளின் மனதில் அச்சம் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
