தளபதிக்கு ‘ஜன நாயகன்’ முடிவு அல்ல, இதுதான் தொடக்கம் – இயக்குனர் ஹெச்.வினோத் | JanaNayagan Audio Launch

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (27/12/2025) மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்த விழாவில் மேடையில் பேசிய ‘ஜன நாயகன்’ படத்தின் இயக்குநர் அ. வினோத், இப்படம் எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.‌ ‘ஜன நாயகன்’ முழு ரீமேக் ஆக இருக்குமோ என்ற பயத்தில் இருப்பவர்களுக்கும், பாதி ரீமேக், பாதி புதிய கதை என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், படம் முன்னும் பின்னும் சரியாக இருக்குமா என்று யோசிப்பவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், ஐயா இது தளபதி விஜய்யின் படம்.

உங்களுடைய மனதில் இந்த படம் குறித்த எல்லாவற்றையும் அழித்துவிட்டு படம் பார்க்க வாருங்கள் என்றும், இது 100 சதவீதம் எண்டர்டெயினிங் படம் என்றும் அவர் உறுதியாக கூறினார். ரசிகர்கள் ஆடி, பாடி கொண்டாடும் தருணங்களும் படத்தில் நிறைய இருக்கும் என்றும், அமைதியாக உட்கார்ந்து ரசிக்க வேண்டிய தருணங்களும் இருக்கிறது என்றார். மேலும், படத்தின் கடைசி 15 நிமிடங்கள் ஃபேர்வெல் மாதிரி இருக்கும் என்று சிலர் சொல்வதை மறுத்த அவர், படத்தில் அழ வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லை படத்தின் முடிவில் முழுக்க நம்பிக்கை மட்டுமே இருக்கும் என்றும், தளபதிக்கு இது முடிவு அல்ல, இதுதான் தொடக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading